;
Athirady Tamil News

உக்ரைன் இராணுவ பதிலடியால் திணறிய ரஷ்யா..!

0

உக்ரைன் இராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவிலுள்ள எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் நடைபெற்று கொண்டிருக்கும் இச்சமயத்தில்,சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ரஷ்ய இராணுவம் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நகரின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலால் நகரங்களின் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 25 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாகவும், பலரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உக்ரைனிலுள்ள உமன் என்ற நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் நேற்று உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மூலமாக ரஷ்யாவின் எல்லைக்குள் உள்ள, கிரிமியாவின் முக்கிய நகரமான செவஸ்டோபோல் பகுதியில் எரிபொருள் தொட்டிகள் வெடித்து சிதறியுள்ளன.

இந்த விபத்தில் பெரிதாக உயிர் தேசங்கள் ஏதும் ஏற்படவில்லை என ஆளுநர் மிகைல் ரஸ்வோஜாயேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அடுத்தடுத்து இருந்த மூன்று பிரமாண்ட எரிபொருள் தாங்கிகள் வெடித்ததில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2014ல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பம், மாஸ்கோவின் கருங்கடல் கடற்படைக்கான முக்கிய கடற்படை தளத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.