மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக லண்டனுக்கு நகர்த்தப்படும் புனித கல் !!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ஆம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வேர்ட் ஸ்காட்லாந்திடமிருந்து கைப்பற்றினார்.
விதியின் கல் என அழைக்கப்படும் இந்தக் கல் பண்டைய ஸ்காட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.
மே 6ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளதால், எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக அங்கிருந்து லண்டனுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
மன்னர் முடிசூட்டு விழாவுக்கு பிறகு மீண்டும் ஸ்காட்லாந்து கோட்டைக்கே கல் திரும்ப எடுத்துவரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.