;
Athirady Tamil News

நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவில் பிரம்மோற்சவ விழா: ஆழ்வார் திருமஞ்சனம் 2-ந்தேதி நடக்கிறது!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே மாதம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி கருட சேவை, 11-ந்தேதி தேரோட்டம் மற்றும் கல்யாணோற்சவம் நடக்கிறது.

அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நிறைவாக 12-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய வளாக தூய்மைப் பணி மே 2-ந்தேதி நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.