சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வருகின்றது.
இந்த விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையே தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது.
அங்கு பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும் ரோந்து சென்றது. அப்போது இரண்டு கப்பலும் மோதுவது போல் அருகருகே வந்தது.
பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற செயலை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.