யாழில் மே தின வாகன ஊர்வலம் !!
மே தினமான இன்று (01) யாழ்ப்பாணத்தில், வாகன ஊர்வலமொன்று நடைபெற்றது. வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே வாகன ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணித்தவர்கள் சிவப்பு கொடியை ஏந்தியிருந்தனர். சில வாகனங்களில் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து காலை 8.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.