டோக்கியோ கல்லூரியில் பேராசிரியராகும் ஜாக் மா..! !
டோக்கியோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் புதிய அமைப்பான டோக்கியோ கல்லூரியில் வருகை பேராசிரியராக அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா அழைக்கப்பட்டுள்ளார்.
58 வயதான மா, இன்றைய தினம் பள்ளியில் வருகை பேராசிரியராக சேர்ந்தார்.
குறிப்பாக ஆராய்ச்சி தொடர்பான கற்கைநெறிகளுக்காக பேராசிரியராக இணைந்துள்ளார்.
இங்கு நிலையான விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, அத்துடன் தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய கருத்தரங்குகளை வழங்குவார் என்று தெரிவித்துள்ளது.
ஜாக் மா மார்ச் மாதம் சீனாவுக்குத் திரும்பிய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்ததை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே ஒரு இடைமுகமாக டோக்கியோ கல்லூரி 2019 இல் நிறுவப்பட்டது.