அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பெண்கள் பலி!!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே மோட்டார் சைக்கிளில் பயணித்தனர் எனவும் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டடனர்.
மானிப்பாயைச் சேர்ந்த நால்வர் காரில் பயணித்தனர். அவர்கள் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.