அன்பு இருக்கலாம்! அதுக்குன்னு இப்படியா! தனது பழைய ஓனருக்காக கோல்டன் ரெட்ரீவர் செய்த சாகசத்தை பாருங்க!!
புதிய ஓனரிடமிருந்து தப்பித்து 64 கி.மீ தூரத்தை தனியாக கடந்து பழைய எஜமானியிடம் நாய் ஒன்று வந்து சேர்ந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றிக்கு பெயர் பெற்றது நாய். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு என்பது ஏறத்தாழ 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தொடங்கிவிட்டது. வேட்டை சமூகமாக இருந்த மனிதர்கள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைத்து சாப்பிட தொடங்கினர். இப்படி சாப்பிட்ட பின்னர் மீதமிருந்த உணவை தேடி ஓநாய்கள் வரத்தொடங்கின. இப்படி வந்த ஓநாய்களை மனிதர்கள் மெல்ல பழக்கி செல்ல பிரானியாக மாற்றினர். இப்படியாக ஓநாயின் சில பிரிவுகளிலிருந்து நாய் வந்தது.
மீதமிருக்கும் உணவுக்காக நாய்கள் மனிதர்களை நாட, அதை தங்களின் பாதுகாப்புக்காக மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டனர். வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்கவும் அது குறித்து எச்சரிக்கை செய்யவும் நாய்கள் பயன்படுத்தப்பட்டன. காலபோக்கில் இந்த நாய்கள் மனிதர்களுக்கு பல வகைகளில் உதவும் திறன் கொண்டவையாக மாறின. அதாவது பார்வையற்றவர்களுக்கு உதவவும், வெயிட்டான பொருட்களையோ, ஆட்களையோ பனி பகுதியில் இழுத்து செல்லவும் நாய்கள் பயன்படுத்தப்பட்டன. இது தவிர வேட்டையில் இந்த நாய்கள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.
நாய்களுக்கு அபாரமான மோப்ப சக்தியும், கூர்மையான கண் பார்வையும் இருக்கிறது. இதனை சிறு வயதில் சிலர் வளர்த்துவிட்டு பின்னர் வேறு ஒருவரிடம் கொடுத்திருப்பார்கள். இப்படி கை மாறி பல ஆண்டுகள் ஆன பின்னரும் தனது முதல் எஜமானரை பார்த்தால் தனது மோப்ப சக்தியை வைத்து இது கண்டுபிடித்துவிடும். இப்படி இருக்கையில் அயர்லாந்தில் கவுண்டி டைரோனில் நைஜெல் ஃப்ளெமிங் எனும் நபர் ஒரு கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் வாங்கினார். இந்த நாயை இதற்கு முன்னர் வளர்ந்து வந்த நபர் இதற்கு கூப்பர் என்று பெயரிட்டிருந்தார். ஒரு மாதங்களுக்கு முன்னர் இவர்கள் நைஜெலுக்கு தங்களது கூப்பரை வளர்க்கமுடியாமல் கொடுத்துவிட்டனர். நைஜெல் டோபர்மோர் பகுதியிலிருந்து கவுண்டி டைரோன் பகுதியில் நைஜெல் பகுதியில் குடிபெயர்ந்துவிட்டார். இந்த பகுதிக்கு வந்து 27 நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் அதன் பின்னர் கூப்பர் காணாமல் போய்விட்டது.
மூன்று நாட்களாக எங்கு தேடியும் கிடைக்காததால் நாய்களை தேடும் தொண்டு நிறுவனங்களுக்கு நைஜெல் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தொண்டு நிறுவனம் கூப்பரை தேட தொடங்கியுள்ளது. ஆனால் கூப்பர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சரியாக ஒரு வாரத்திற்கு பின்னர் கூப்பர் தனது பழைய எஜமானியான டோபர்மோர் பகுதிக்கு திரும்பி வந்திருக்கிறது. இந்த சம்பவம் அயர்லாந்து முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூப்பர் யாருடைய உதவியையும் இல்லாமல் சுமார் 64 கி.மீ தூரம் கடந்து வந்திருக்கிறது. இது குறித்து அதன் பழைய எஜமானி கூறுகையில், “நாங்கள் கூப்பரை பிரிய மனம் இல்லாமல் இருந்தோம். ஆனால் எங்களால் தொடர்ந்து இதனை வளர்க்க முடியவில்லை. எனவே நாங்கள் இதனை நைஜலுக்கு கொடுத்துவிட்டோம்.
அவரும் இங்கிருந்து 64 கி.மீ தொலைவு வரை சென்றுவிட்டார். ஒரு மாதம் கழித்து கூப்பர் திரும்ப வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நடக்கும் என்று எங்களால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே நாங்கள் மீண்டும் கூப்பரை விட்டுக்கொடுப்பதாக இல்லை. நாங்களே கூப்பரை தொடர்ந்து வளர்க்கப்போகிறோம். கூப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்” என்று கூறியுள்ளார்.