ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் இந்தியாவின் யோசனை ஜி 7 நாடுகள் ஏற்பு!!
ஒரு பூமி,ஒரு குடும்பம்,ஒரு எதிர்காலம் என்ற இந்தியாவின் கருப்பொருளை ஜி 7 நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. இதில் ஜி- 20 க்கான இந்தியாவின் கருப்பொருள் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதாகும். இந்நிலையில், ஜி-7 உச்சி மாநாடு இம்மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 7 மாநாட்டுக்கு முந்தைய ஜி 7 நாடுகளின் தொழில் துறையை சேர்ந்தவர்களின் ஆலோசனை கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜப்பான்,இத்தாலி, கனடா,பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளை சேர்ந்த தொழில்துறை சம்மேளனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை ஏற்று கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ‘‘மனிதன், விலங்குகள்,செடிகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. அனைத்து உயிரினங்களின் வாழ்வின் மதிப்பை எடுத்து காட்டும் வகையில் கருப்பொருள் அமைந்துள்ளது’’ என்றார்.