கர்நாடகாவில் பொது சிவில் சட்டம்… பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!!
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் பாஜக, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், கர்நாடக மாநிலத்தில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்துவதுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13ம் தேதி எண்ணப்படுகின்றன.