யாழ்.கொடிகாமத்தில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு ! (PHOTOS)
யாழ்ப்பாணம் , கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் எருவன் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரியும் சத்தியநாதன் சத்தியானந்தன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் வானும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் வான் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.