சிறுமி மற்றும் இரு பெண்கள் உயிரிழப்பு!!
நாட்டின் மூன்று பிரதேசதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறுமியும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகாமையில் இருந்த இரு சிறுமிகள் மற்றும் பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வென்னப்புவ கரையோர வீதி பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தேவாலேகம பகுதியில் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் மோதியதில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.
தேவாலேகம உருலதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 53 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.