பீகாரில் தீ விபத்து- 4 சிறுமிகள் பலி!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் ராமதயாலு ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுமிகள் உடல் கருகி பலியானார்கள். அவர்களுக்கு 3 முதல் 12 வயதாகிறது. மேலும் 7 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.