;
Athirady Tamil News

ஆணைக்குழுவுக்கு அவுஸ்திரேலியா உதவி !!

0

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயற்பாட்டு குழு ஒன்றினால் ஊடாக இதன் செயற்பாடுகள் வழிநடத்தப்படும்.

செயற்திறன் செயற்பாடுகள் தொடர்பிலான சர்வதேச முறைமைகளை ஆராய்ந்து பார்ப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாவதோடு, அதற்காக சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அவுஸ்திரேலிய செயற்திறன் ஆணைக்குழுவின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது. அதற்கான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்திருந்தது.

இந்த ஆரம்பமானது இலங்கையின் பொருளார மீள் எழுச்சிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதை காண்பிக்கும் அதேநேரம், அதனால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.