கடந்த 6 மாதத்தில் மட்டும் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி!!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஜான் கிர்பி அளித்த பேட்டியில், ‘கடந்தாண்டு டிசம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 6 மாத காலத்தில் நடந்த உக்ரைன் – ரஷ்யப் போரில், 20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்யா தனது ராணுவ பலத்தை இழந்துவிட்டது.
பலியான வீரர்களில் பாதி பேர் ரஷ்ய தனியார் நிறுவனமான வாக்னரில் பணியாற்றியவர்கள். ஆனால் வாக்னரின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் குழுவில் 94 பேர் மட்டுமே இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. வாக்னரின் அறிக்கையானது அபத்தமானது. ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை எங்களது உளவு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது’ என்றார். ரஷ்ய வீரர்களின் பலி விபரங்களை கூறிய கிர்பி, உக்ரைன் வீரர்களின் இறப்பு எண்ணிக்கை விபரங்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.