கனடாவில் நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம் – அவரை தேடும் அதிகாரிகள் !!
கனடாவில் பரிசிழுப்பு ஒன்றில் சுமார் மூன்று மில்லியன் டொலர் பரிசு வென்றவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
பிரபல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான புளு ஜேய்ஸ் கழகத்தின் பரிசிழுப்பில் நபர் ஒருவர் 2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார்.
ஏப்ரல் மாதத்திற்கான 50/50 பரிசு சீட்டிழுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. Jays Care Foundation அமைப்பினால் இந்த சீட்டிழுப்பு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சீட்டு கொள்வனவு செய்யப்பட்ட இடத்தில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் யார் வெற்றியாளர் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசு வென்றவர்கள் தொடர்பு கொண்டு பணப் பரிசினை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த பருவ காலத்தில் புளு ஜேய்ஸ் கழக ரசிகர்கள் மொத்தமாக 10 மில்லியன் டொலர் பரிசுகளை வென்றெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.