கொச்சி விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் துருவி, துருவி சோதனை செய்தனர். இதில் அவரிடம் 1250 கிராம் தங்கமும், 10 கிராம் தங்க நாணயங்களும் இருந்தன. இதன் மதிப்பு ரூ.53 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை அவர் யாருக்காக கடத்தி வந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.