கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்கள் ஐவருக்கு கோமா அறக்கட்டளையினால் புத்தகப்பை!! (PHOTOS)
யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெற்றோரை இழந்த தெரிவு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புத்தகப்பை நேற்று [02] வழங்கி வைக்கப்பட்டது.
கேமா அறக்கட்டளையினால் முன்னாள் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசலா சிவா ஊடாக மாணவர்களுக்கான குறித்த உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட புத்தகப்பைகளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கோடு சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் முலவை மயிலிட்டி வடக்கை சேர்ந்த குடும்பத்தின் கனிஷ்டன் தோல் உற்பத்தி விற்பனை நிலையத்தில் பெற்றுகொள்ளப்பட்டது .