ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் இராணுவத்தினர்!!
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வெசாக் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிலையில் யாழ்ப்பாணம் நாக விகாரையிலும் வெசாக் தின ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. நாக விகாரைக்கு அருகிலுள்ள ஆரிய ஆரியகுளத்தினுள்ளும் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஆரியகுளத்தினுள் மத அனுஷ்டானங்களை நிகழ்த்த யாழ் மாநகரசபை தடை விதித்திருந்தது. தற்போது சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் ஆரிய குளத்தினுள் வெசாக் தின ஏற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது