யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!!
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மாலை 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (03) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 74.8 மில்லிமீட்டர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.