வட்டாரத்துக்கு வெளியே வேலை செய்யலாம் !!
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்களை போட்டியிடும் வட்டாரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்த்தன சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
வேட்புமனு சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்கள் தொடர்பாக தேர்தல் நடாத்தப்படும் வரைக்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்களைக் கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.