இத்தாலி மாபியா கும்பலுக்கு எதிராக ஜெர்மனி அதிரடி வேட்டை!!
இத்தாலியை சேர்ந்த டிரென்கெட்டா மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் போதை, ஆயுதங்கள் கடத்தல், சட்ட விரோத பண பரிமாற்றம் போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கும்பல் மீது ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாபியா கும்பலுக்கு எதிராக இத்தாலி,ஜெர்மனி போலீசார் ஒரே நேரத்தில் வேட்டை நடத்தினர்.
இதில் சந்தேகத்துக்குரிய 30 நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அதே போல் இத்தாலியிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், போதை, ஆயுத கடத்தல், சட்ட விரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 108 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.