இம்ரானின் ஜாமீன் ரத்து செய்யப்படும்: பாக். நீதிமன்றம் எச்சரிக்கை!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பதவி இழந்த பின்னர் தேச துரோகம், ஊழல் என பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக் எம்பி மோசின் ஷானவாஸ் ரஞ்சா என்பவரை ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார்.
இம்ரானின் தூண்டுதலில்தான் கொலை முயற்சி நடந்ததாக மோசின் புகார் அளித்தார். இந்த வழக்கு நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இம்ரான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அதிருப்தி அடைந்த நீதிபதி‘‘ இம்ரான் கான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்’’ என எச்சரித்தார்.