ஈரான் அதிபர் சிரியாவுக்கு திடீர் பயணம்!!
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைய்சி திடீரென இரண்டு நாள் பயணமாக சிரியா சென்றுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இந்த உள்நாட்டு போரின்போது அதிபர் பஷருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்தது. அவருக்கு உதவிட பல ராணுவ ஆலோசகர்கள், போராாளிகளையும் ஈரான் அனுப்பியது.
இதனால் தான் சிரிய அரசு படைகள் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தன. இந்நிலையில்,ஈரான் அதிபர் இப்ராகிம் ரைய்சி நேற்று சிரியா சென்றார். சிரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இப்ராகிம் இருநாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.