குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் ஒடிசா பயணம்!!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார். அங்கு, ஒடிசா மாநிலத்தின் ராய்ரங்பூர், பஹத்பூர் மற்றும் பரிபடா மாவட்டங்களுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (மே 4 ஆம் தேதி) பஹாத்பூரில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து, ஹட்பத்ராவில் உள்ள பிரம்மா குமாரிகள் மையத்திற்குச் செல்லும் அவர், அங்கு பிரம்மா குமாரிகளின் மையத்தில் ‘போதையில்லா ஒடிசா’ பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இன்று மாலை, ரைரங்பூர் ஸ்டேடியத்தில் ரைரங்பூர் நகராட்சியால் அவருக்கு மரியாதை அளிக்கப்படும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். மே 5ம் தேதி அன்று (நாளை) குடியரசுத் தலைவர் முர்மு பண்டிட் ரகுநாத் முர்முவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அவர் சிமிலிபால் சரணாலயத்திற்கு செல்கிறார். மே 6ம் தேதி, பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.