;
Athirady Tamil News

காங்கிரசும், பொய்யும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்: பிரகலாத் ஜோஷி தாக்கு !!

0

மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய் மூட்டை. வானமும், பூமியும் ஒன்றாக மாறிவிட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையின்படி பார்த்தால், 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த கட்சி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர். தலித் மற்றும் விவசாயிகள் பெயரில் அக்கட்சி பொய்களை கூறி வருகிறது. இதற்கு முன்பு உத்தரகாண்டிலும் இதேபோன்ற பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. இதனால் அங்கு தோல்வியை தழுவியது.

பா.ஜனதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். அதுபோல் கர்நாடகத்திலும் காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என்று அக்கட்சி கூறி வருகிறது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது. முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பது இந்துக்களை அவமதிப்பது போன்றது. தற்போது பஜ்ரங்தளத்தையும், பி.எப்.ஐ. அமைப்பையும் தடைசெய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. இது சமதான அரசியலின் ஒரு பகுதியாகும். மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல்காந்தியும் நாட்டுக்காக என்ன செய்ய போகிறார்கள்?.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காங்கிரசும், பொய்யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.