உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவு!!
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம்.
எவ்வாறாயினும், ஒரு கிலோ கோதுமை மாவுக்கான 25 ரூபாவாக இருந்த வரி தற்போது 45 ரூபாவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நாட்டிலும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 200 முதல் 205 ரூபாய் வரை உள்ளது.
இதேவேளை, கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.