;
Athirady Tamil News

அது எப்படி செய்வீங்க? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு எரித்த கேஎஸ் ஈஸ்வரப்பா!!!

0

மூத்த பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா இவ்வாறு செய்தார். பஜ்ரங் தள் கட்சியை தேசப்பற்று கொண்ட அமைப்பு ஆகும், அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்? என்று கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கேஎஸ் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் பொது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக மதம் மற்றும் சாதி அடிப்படையில் வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. “சட்டம் மற்றும் அரசியலமைப்பை புனிதமான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி இதுபோன்ற அமைப்புகளை தடை செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுப்பபோம், ” என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேஎஸ் ஈஸ்வரப்பா அது முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டார். “ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகமும் தனக்கு ஆதரவாக உள்ளது, இதனால் நான் தான் முதல்வராவேன் என்று டாக்டர் கே சிவகுமார் கூறுகிறார். பிற்படுத்தப்பட்டோர் சமூகம் தனக்கு ஆதவராக இருப்பதால், நான் முதல்வர் ஆவேன் என்று சித்தராமையா கூறுகிறார். இதில் இருந்தே இரு தலைவர்களும் சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுவது அப்பட்டமாக தெரிகிறது,” என்று கேஎஸ் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.