;
Athirady Tamil News

மாங்குளம் பராசக்தி தேவி கோவிலில் மகாகாலேஸ்வர யாகம் 6-ந்தேதி தொடங்குகிறது!!

0

கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் இம்மாதம் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது. நாட்டிலுள்ள 12 ஜோதிர்லிங்க சிவன் கோவில்களின் முக்கிய பூசாரிகள், முகேஸ்வர சிவன் கோவில் யாக பண்டிதர்கள், பைரவர் கோவிலின் முக்கிய புரோகிதர்கள், மூகாம்பிகை கோவிலின் முதன்மை தந்திரி ஆகியோர் இந்த யாகத்தினை நடத்துகிறார்கள். 13-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் அகோர மகா சனீஸ்வர யாகம், மகாமண்டலேஸ்வர் தேவேந்தர் சாமிகள் தலைமையில் நடக்கிறது. நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு புன்னியாக பூஜைக்கு பின், ஆழி மலை மகாதேவர் கோவிலில் இருந்து எடுத்து வரப்படும் அரணியில் இருந்து எடுக்கப்படும் அக்கினி பகர்ந்து மகாகாலேஸ்வர யாகம் தொடங்கும்.

அதைத்தொடர்ந்து, பரசுராம அனுமதி பூஜை உள்பட பூஜைகள் நடைபெறும். 9 மணிக்கு 11 மடங்களின் சன்னியாசிகள் முன்னிலையில் மகாயதி பூஜை நடக்கிறது. 7-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான நாட்களில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரை யாக பூஜைகளின் தொடர்ச்சியாக பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் மாலை 6.45 மணி முதல் மகாகாலேஸ்வர திருநீற்றுப் பூஜை நடக்கிறது. 7-ந் தேதி நடைபெறும் பஸ்மாரதி பூஜைக்கு கிருஷ்ணானந்த காளிதாஸ் சுவாமிகள் தலைமை தாங்குகிறார். 14-ந் தேதி நடைபெறும் திருநீற்று சிறப்பு பூஜையில் நேபாளத்தை சேர்ந்த புத்தமத உலக அமைதிக்கான தலைமை அதிகாரி லாமா கியாச்சோ ரிம்போச்சே கலந்து கொள்கிறார். மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.