ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து: ஒரு வீரர் பலியானதாக தகவல்!!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மூன்று ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர், ஆற்றில் விழுந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிந்ததாகவும், இரண்டு பேர் காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.