செர்பியாவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி- 10 பேர் படுகாயம்!!
செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரம் அருகே மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர் நகரும் வாகனத்தில் இருந்து தானியங்கி ஆயுதத்தால் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக அரசு நடத்தும் தொலைக்காட்சியின் மூலம தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வந்தனர்.