புடினைக் கொல்ல ஆளில்லா விமானத் தாக்குதல் – அமெரிக்கா மீது குற்றச்சாட்டு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் கொல்லும் நோக்கில் அனுப்பப்பட்ட 2 ஆளில்லா விமானங்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையை நோக்கி செலுத்தப்பட்ட குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா முறியடித்திருந்தது.
ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டதாக ரஷ்யா கூறியிருந்ததுடன், இதனை உக்ரைன் மற்றும் அமெரிக்கா மறுத்திருந்தது.
இதேவேளை, இருநாடுகளும் இந்த தாக்குதலை பொறுப்பேற்க மறுப்பது வேடிக்கையானது என அதிபர் புடினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் எங்கு தாக்க வேண்டும் என திட்டமிட்டுக் கொடுப்பதும், அதற்கான ஆயுதங்களை வழங்குவதும் அமெரிக்காதான் என டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என அதிபர் புடினின் பேச்சாளர் கூறியுள்ளார்.