வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை!! (PHOTOS)
வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் , தண்ட பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.