சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு!!
வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
சிவனொளிபாதமலை யாத்திரை நள்ளிரவு வரை தொடரும் என்றும் அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் புனிதப்பெட்டி மற்றும் சிலை அடுத்த வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலம் வரை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.