நைஜீரியாவில் 2 வாரத்தில் பயங்கரவாத குழுவை சேர்ந்த 40 பேர் கொலை!!
நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் நைஜீரியா வடகிழக்கு மாகாண பகுதியில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர் ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் இறந்து உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அந்த குழுவினரின் குடும்பத்தினர் குழந்தைகள் உள்பட 510 பேர் அரசிடம் சரண் அடைந்து உள்ளனர்.