அமெரிக்க பிராந்திய வங்கிகளில் வீழ்ச்சி – பதற்றத்தில் பைடன் அரசு..!
உலகின் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் பல பிராந்திய வங்கிகள் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை தொடர்ந்து பெரும் நெக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளது.
இதனால் அடுத்தடுத்து வங்கிகள் வங்குரோத்து அடைந்து வரும் வேளையிலும், கடன் வரம்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க அரசு தள்ளப்பட்டு உள்ளதால் இனியும் வல்லரசு நாட்டில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்பதை மறைக்க முடியாது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மற்றொரு வங்கி வங்குரோத்தடைய தயாராகியுள்ளது.
அமெரிக்காவில் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் PACIFIC WESTERN BANK-ன் துணை நிறுவனமான பேக்வெஸ்ட் பான்கார்ப் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் விற்பனை செய்யவோ அல்லது மூலதனத்தை திரட்டி காப்பாற்றும் இறுதிக்கட்ட வாய்ப்புகளை தேடி வருகிறது.
PACIFIC WESTERN BANK-ன் வீழ்ச்சி அமெரிக்க சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் பிற பிராந்திய வங்கிகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
குறிப்பாக Western Alliance Bancorp பங்குகளை கடுமையாக பாதித்துள்ளது. சில்வர்கேட் மற்றும் சிலிக்கான் வேலி வங்கிகளில் ஆரம்பித்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் மார்ச் 8ஆம் திகயில் இருந்து PACIFIC WESTERN வங்கி பங்குகள் 90 சதவீதம் வரையில் சரிந்தது.
இதுதான் சந்தை கண்காணிப்பாளர்கள் மத்தியில் அமெரிக்காவில் அடுத்து வங்குரோத்தாக்கப்போகும் வங்கி என்று அறிவிக்க முக்கிய காரணமாக உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் 30 பில்லியன் டொலர் கொடுத்து காப்பாற்றப்பட்ட First Republic Bank ஒரு சில வாரத்திலேயே வங்குரோத்தடைந்தது.
இது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்பு அமெரிக்க அரசு மற்றும் FDIC தலையீடு காரணமாக ஏலம் முறையில் JPMorgan Chase வாங்குரோத்தடைந்த பர்ஸ்ட் ரிப்பப்ளிக் வங்கி கைப்பற்றப்பட்டது.