;
Athirady Tamil News

பிரித்தானிய மன்னரின் முடி சூட்டு விழாவில் பாரிய நடவடிக்கைக்கு ஆயிரக்கணக்கானோர் திட்டம்!

0

பிரித்தானிய மன்னர் சார்ளசின் முடிசூட்டு விழாவின் போது, மன்னராட்சிக்கும், மன்னராட்சி நீடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய லண்டனில் உள்ள Trafalgar Square என்னுமிடத்தில் 1,600 பேர் அணி திரள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த எதிர்ப்பு மன்னருக்கு அல்ல, மன்னராட்சிக்கு எதிரானது என மன்னராட்சிக்கு எதிரான அமைப்பான Republic என்னும் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Graham Smith என்பவர், தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளவர்கள், மன்னராட்சி என்பது மக்கள் பணத்தை வீணாக்கும் நடவடிக்கை என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, சமீபத்தில் 4,000 பிரித்தானியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 51 சதவீதத்தினர் மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணம் செலவிடப்படக்கூடாது என தாம் கருதுவதாகவும் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு சுமார் 250 மில்லியன் பவுண்டுகள் செலவாகலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, முடிசூட்டுவிழா அன்று, ’மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்’, ’இவர் எங்களுடைய மன்னர் அல்ல’ என்று கூறும் பதாகைகளுடனும், கோசங்களுடனும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.