கேரள முன்னாள் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி!!
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் உடல்நலம் தேற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதமும் உம்மன் சாண்டி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.