ஊதிய உயர்வு கோரி ஹாலிவுட் திரையுலக எழுத்தாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொலைக்காட்சி தொடர், திரைப்பட பணிகள் முடங்கியது..!!
ஹாலிவுட் திரையுலக எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு கோரி 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தொலைக்காட்சி தொடர், திரைப்பட பணிகள் முடங்கியுள்ளன. WRITERS GUILD ON AMERICA என்ற தொழிற்சங்கத்தில் 11,500க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் பங்களிப்பை அளித்து வரும் திரைக்கதை எழுத்தாளர்கள் தங்களின் ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக ஓடிடி மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து வேலை நிறுத்தத்தில் இறங்கிய எழுத்தாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எழுத்தாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக டிஸ்னி, பேரமூன் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களில் பணிகள் முடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதலே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ள எழுத்தாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.