மோடி ஆஸ்திரேலியா செல்லும் நிலையில் மேலும் ஒரு இந்து கோயில் மீது தாக்குதல்!!
ஆஸ்திரேலியா,சிட்னியின் ரோஸ்ஹில் பகுதியில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. கோயிலின் சுவர்களில் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் நேற்று எழுதப்பட்டிருந்தன. அதே போல் கோயில் வாசலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்ததை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகிகள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
வரும் 24ம் தேதி குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார். இந்நிலையில், கோயிலில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, மெல்போர்னில் 3 இடங்களிலும்,பிரிஸ்பேனில் 2 இடங்களில் உள்ள கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பானீஸ்சிடம் இந்த பிரச்னையை மோடி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.