நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை முன்பாக உள்ள வீதியை செப்பனிட கோரிக்கை!! (PHOTOS)
யாழ்ப்பாணம் நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்பாக உள்ள வீதி கடந்த மூன்று வருடங்களாக சாதரண மழை பெய்யும் நேரங்களில் கூட நடந்தும் போக்குவரத்து செய்யமுடியாதளவிற்கு மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதால் பாடசாலை வருவதற்கு மாணவர்கள் அதிபருடன் இணைந்து கற்களை போட்டு பரவும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உரிய தரப்புக்கள் உடனடி நடவடிக்கைக்கு முன்வரவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைக்கும் செல்லும் மாணவர்களது பாதணிகள், ஆடைகள் என்பனவும் அழுக்கடைந்து மிகவும் சிரமப்படுகின்றரென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வீதியை புனரமைப்பதற்கு ஆவன செய்து மாணவர்களின் போக்குவரத்திற்கு உதவவேண்டுமேன பாடசாலை நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.