ஆனையிறவில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!!
ரூ.12 லட்சம் மதிப்பிலான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது ஆனையிறவில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.
போலி நாணயத்தாள்களுடன் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலுக்கு அமைவாக ஆனையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர்களிடமிருந்து 5,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை முன்னெடுக்கின்றனர்