சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)
தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் , கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ,செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ரெலோவின் உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.