QR குறியீட்டு முறை நீக்கம் தொடர்பான புதிய செய்தி!!
எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன.
அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் போட்டித்தன்மை அதிகரிக்கும்.
எனவே எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். அத்தோடு தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களும் உருவாகும் என்றார்.
மேலும், QR குறியீட்டு முறைமையை நீக்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. போதியளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டதன் பின்னர் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படும். இதேவேளை, மின் கட்டணம் தொடர்பிலும் நிச்சயம் விரைவில் சலுகைகள் வழங்கப்படும் என்றார்.