குருகிராமில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த இருவர் கைது!!
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிறுமி அளித்து வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.