சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்களின் பார்வை இல்லாமல் போனமை தொடர்பில் விசாரணை!!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பல நோயாளர்களின் பார்வை இல்லாமல் போனமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண் சத்திரசிகிச்கைக்குள்ளான நோயாளர்கள் சிலர், தாம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் கண் சத்திரசிகிச்கைக்குள்ளான 6 நோயாளர்கள் தொடர்ந்தும் அந்த வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தவிடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவியது, அதற்கு பதிலளித்த அவர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்தவிடயம் தொடர்பில், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்தார்.
தேசிய கண் வைத்தியசாலையில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் மருந்தைப் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அண்மையில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கக்கது.