ஆளும் கட்சிக்குள் வலுக்கும் விரிசல்!!
உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் குறித்து ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துடன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 25ஆம் திகதி சட்டமூலத்தை சமர்ப்பிக்க இருந்த நிலையில், எதிர்ப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.