அமெரிக்க ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமனம்!!
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நீரா அதிபரின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆலோசகராக இருந்த சூசன் ரைஸ் பணிநிறைவு பெற்றதை அடுத்து புதிய ஆலோசகராக நீரா டாண்டனை நியமித்து அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில்,‘‘பொருளாதாரம், கல்வி எனது உள்நாட்டு கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் நீரா டாண்டன் தொடர்ந்து பணியாற்றுவார்” என்றார்.