மக்களை எச்சரிக்கும் வைத்தியர்கள் !!
கடும் மழையுடனான காலநிலை நிலவும் இந்தப் பருவத்தில் வயிற்றுப்போக்கு (Diarrhea) நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதாக குழந்தை மருத்துவர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான மழைக்காலங்களில் ஈ போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்தல் போன்றவை இந்நிலைமைக்குக் காராணமாக இருக்கலாமென அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை ஈரலிப்பான காலநிலை தொடர்வதால் தொற்றுநோய்ப் பரவலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் இவ்வேளைகளில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகளின் ஊடகத்துறைப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.