அமெரிக்க ஷாப்பிங் மாலில் 9 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளியை சுட்டுக் கொன்றது போலீஸ்!!
அமெரிக்காவின் ஷாப்பில் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த டல்லாஸுக்கு வடக்கே செயல்படும் கடைவீதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து டெக்சாஸ் காவல் துறையின் தலைவர் பிரையன் ஹார்வி கூறுகையில்:
கடைவீதியில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடந்த போது, அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்து என்கவுன்டரில் சுட்டார். அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 9 பேரில் சிலர் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் ஆவர்’ என்றார்.
தொடர்ந்து டெக்சாஸ் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் ப்ரீமியம் ஷோரூம் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளியை சுட்டுக் கொன்றுவிட்டோம். ஷாப்பிங் மாலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.